Sunday, 5 August 2012

மைக்ரோசாப்டுக்கு ஏற்பட்ட முதல் நஷ்டம்

26 ஆண்டுகளில் மைக்ரோசாப்டுக்கு ஏற்பட்ட முதல் நஷ்டம்


உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், கடந்த 26 ஆண்டுகளில் முதல் முறையாக நஷ்டத்தை சந்தித்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டில் ரூ. 35,000 கோடிக்கு இணையதள விளம்பர நிறுவனமான aQuantive ஐ மைக்ரோசாப்ட் வாங்கியது. aQuantive நிறுவனத்தை வாங்கியதிலும் அதில் செய்யப்பட்ட முதலீடுகளும் மைக்ரோசாப்டுக்கு நஷ்டத்தையே தந்துள்ளன.
இந்த நஷ்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்போது தான் தனது வரவு-செலவுக் கணக்கில் முழுமையாக சேர்த்து கணக்கை நேர் செய்துள்ளது.
இதனால் இந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் மாதத்தில்) மைக்ரோசாப்ட்டின் கணக்கில் 492 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதாவது மைக்ரோசாப்ட்டின் பங்குகள் 6 சதவீத இழப்பை சந்தித்துள்ளன.
இந்நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 26 வருடங்களில் சந்திக்கும் முதல் நஷ்டம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது உண்மையில், இது இந்த காலாண்டில் ஏற்பட்ட நஷ்டமே அல்ல. கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட நஷ்டத்தை சேர்த்து ஒரே காலாண்டில் அறிவித்து கணக்கை நேர் செய்துள்ளது மைக்ரோசாப்ட்.

No comments:

Post a Comment