Yammer சமூக வலைத்தளத்தை வாங்குகிறது மைக்ரோசாப்ட்
பேஸ்புக்கைப்
போன்றதொரு சமூக வலை தளமானது தான் யாமர். இது அமெரிக்காவில் மிகவும்
பிரபலமானது. இதனை வாங்க மைக்ரோசப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

2008ஆம்
ஆண்டில் அமெரிக்காவில் உள்ள டேவிட் சாக்ஸ் என்பவரால் தொடங்கப்பட்டது யாமர்
சமூக தளம். தற்போது யாமர் சமூக தளத்தை 2 லட்சத்திற்கும் அதிகமான
நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
யாமரை 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதனால் விரைவில் யாமர் மைக்ரோசாப்டின் கைகளுக்குள் வந்துவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலை தள சந்தையில் யாமரோடு ஜைவ், சாட்டர் மற்றும் அசனா போன்ற வளைத்தளங்களும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் மைக்ரோசாப்டின் கையில் யாமர் வந்தால் மேலும் பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இணையதள முகவரி
No comments:
Post a Comment