விண்டோஸ் 7ன் வேகத்தை அதிகரிப்பதற்கு
கணிணிப்பாகங்களை ஒருங்கிணைத்து செயற்பட வைப்பதில் இயங்குதளமானது மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

இதனால்
ஒரு கணிணியின் வேகம் இயங்குதளத்தின் செயற்பாட்டிலும் தங்கியுள்ளது.
இவ்வாறு இயங்குதளங்களில் பிரபல்யமானதாகக் காணப்படும் விண்டோஸ் 7 ன் ஆரம்ப
வேகத்தை (startpu speed) அதிகரிப்பதன் மூலம் கணிணியின் ஆரம்பவேகத்தினையும் அதிகரிக்க முடியும்.
இதனை செயற்படுத்துவதற்கு Start பொத்தானை அழுத்தி அங்கு தேடுவதற்கு எனத் தரப்பட்டுள்ள பகுதியில் msconfig என டைப் செய்து தோன்றும் புரோகிராமை இயக்க வேண்டும்.
தொடர்ந்து தோன்றும் விண்டோவில் startup எனும்
டேப்பினை தெரிவு செய்து கணிணி ஆரம்பிக்கும்போது இயங்க தேவையில்லை என
நீங்கள் கருதும் புரோகிராம்களின் நேரே இருக்கும் தெரிவினை நீக்கி விட்டு
பின் Apply செய்து Ok செய்யவும்.


No comments:
Post a Comment