Sunday, 5 August 2012

விண்டோஸ் திருட்டை ஒழிக்க மைக்ரோசாப்டின் புதிய வழி

விண்டோஸ் திருட்டை ஒழிக்க மைக்ரோசாப்டின் புதிய வழி

புதியதாக கணணி ஒன்று வாங்குகையில் விண்டோஸ் சிஸ்டம் பதிந்து கொடுக்கப்படுகிறது. கணணி தயாரிக்கும் நிறுவனங்கள் இதற்கான ஒப்பந்தத்தினை
மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் மேற்கொண்டு, ஒவ்வொரு கணணிக்கு பதியப்படும் விண்டோஸ் சிஸ்டத்திற்கான உரிமத்தைப் பெற்று அதற்கான எண்ணையும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் டிஸ்க் அல்லது சிஸ்டம் மீட்பதற்கான ரெகவரி டிஸ்க்கினை வழங்குகின்றன.
கணணியை அசெம்பிளிங் செய்து கொடுப்பவர்கள், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பைரசி பதிப்பு என்று அழைக்கப்படும் நகல் பதிப்பினை பதித்துக் கொடுப்பார்கள்.
இது உரிமம் இல்லை என்பதால், மைக்ரோசாப்ட் இணையத்தளத்திலிருந்து எந்த சேவையையும் பெற முடியாது. இவ்வாறு இயங்குவது ஒரு வகையில் திருட்டு வழி என்றே கூற வேண்டும்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனைக் கண்டறிவதற்கென பலரை நியமித்து, அவர்களும் முறையாக உரிமம் இல்லாமல் விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துவோரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக நிறுவனங்கள், வர்த்தக மையங்களில் இது போல பயன்படுத்துவது கடுமையாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
முறையாக உரிமம் பெற்று, அதற்கான சிடி பெற்றவர்கள் பலர், உரிமம் குறித்த தகவல்களை தொலைத்து விடுகின்றனர்.
சி.பி.யு. கேபினில் ஒட்டப்பட்டு வரும் லேபிள் நாளடைவில் கிழிந்து மறைந்து விடுகிறது. இதனை எடுத்துப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் அல்லது கீ எண்ணை எழுதி இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment