Blog
நீங்கள் நினைக்கும், கேட்கும், படிக்கும், பார்க்கும் அத்தனை
விஷயங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள
நினைக்கிறீர்களா? தொடங்குங்கள் ஒரு
ப்ளாக்கை. அதில்
உங்கள்
கருத்துக்களையும் எண்ணங்களையும் சிந்தனை களையும் கொட்டுங்கள். ப்ளாக்
ஆரம்பிப்பது மிகச்
சுலபம்.
ஆங்கிலத்தில்தான் ஆரம்பிக்க வேண்டும் என்றில்லை. தாராளமாக தமிழிலேயே ஆரம்பிக்கலாம். உங்கள்
ப்ளாக்குக்கு வரவேற்பு இருக்கும்பட்சத்தில் கூகுள்
ஆட்சென்ஸ் மூலம்
விளம்பரம் கிடைக்கும். பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே வருமானம் எகிறும்.You Tube

உங்களது திறமை களை வீடியோ படமாக எடுத்து அதை யூ.டியூப்-ல் பதிவு செய்து வெளியிடுங்கள். உங்களது வீடியோவைப் பார்க்க அதிகளவில் பார்வையாளர்கள் வரும்போது விளம்பரங்களும் தேடிவரும். இதற்கு யூ.டியூப்-க்குச் சென்று ஒரு அக்கவுன்ட் ஆரம்பியுங்கள். ஜி-மெயில் அக்கவுன்ட் தொடங்குவது போல இதுவும் சுலபமானதே. நீங்கள் எடுக்கும் வீடியோக்களை அதில் 'அப்லோட்’ செய்து, அதை நம் வெப்சைட்டிலோ அல்லது ப்ளாக்கிலோ சேர்க்க வேண்டும். இதற்கு விளம்பரங்கள் வர நீங்கள் விரும்பினால் adsense எனும் சைட்டுக்கு சென்று உங்களது யூ.டியூப் பற்றிய விவரங்களைக் கொடுத்தால் அவர்கள் தகுதியிருப்பின் விளம்பரங்கள் தருவார்கள். ஃபிளிக்ஸ்யா (flixya) மற்றும் மீடியாஃபிளிக்ஸ் (mediaflix) போன்ற இணையதளங் களில் மற்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
புகைப்படங்கள்

உங்களுக்கு புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் என்றால் அதன் மூலமும் சம்பாதிக்கலாம். .ஃபோடோலியா, ட்ரீம்ஸ்டைம், ஸட்டர்ஸ்டாக் போன்ற புகைப்பட ஏஜென்ஸிகள் புகைப்படங்களைப் பெற்றுக் கொண்டு அதற்குத் தகுந்த தொகையைக் கொடுக்கின்றன.
மற்றவர்களுக்காகத் தேடுங்கள் (Researching for Other)
மற்றவர்களுக்குத் தேவையான தகவல்களைத் தேடிக்
கொடுப்பது, டிசைன்
செய்து
கொடுப்பது என
ஆன்லைனிலேயே வேலைகளைச் செய்து
கொடுக்கலாம். வாரத்தில் கொஞ்ச
நேரம்
செலவழித்தால் போதும்
இதற்கு.
பல
அமைப்புகள், நிறுவனங்களுக்கு இது
போன்ற
தகவல்களை ஆன்லைனிலிருந்து தேடிக்
கொடுப்பவர்களுக்கு அதற்குத்தகுந்த தொகை
கொடுக்
கப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் இதன்
மூலம்
எளிதாகச் சம்பாதிக்கலாம்.
இ-டியூசன்ஸ்
உங்களுக்கு கற்றுத் தரும்
திறமை
இருந்தால் இ-டியூசன் மூலம் நிறையவே சம்பாதிக்கலாம். கற்றுத் தருவதில் நீங்கள் எக்ஸ்பர்ட் என்றால் உடனே
tutorvista, e-tutor, smartthinking, tutor.comபோன்ற இணையதள
முகவரியில் பதிவு
செய்து
கொள்ளுங்கள். உங்களது கற்பிக்கும் திறன்
சிறப்பாக இருந்தால் இணையதளத்தில் வெப்பினார் (Webinar) மூலம் செமினார் எடுக்கலாம். மாணவர்கள் நீங்கள் நடத்தும் பாடத்தை வெப்பினார் மூலம்
பார்க்க கட்டணம் கட்ட
வேண்டும். அதன்
மூலம்
உங்களுக்கு வருமானம் கிடைக்கும். ஆசிரியர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க அரிய
வாய்ப்பு.
அஸிஸ்டென்ட்
சிறு
தொழில்
செய்யும் நிறுவனங்களால் பலரை
முழு
நேர
வேலையாட்களாக நியமித்து சம்பளம் தர
முடியாது. அப்படிப்பட்ட நிறுவனங்களுக்குத் தேவையான சின்னச் சின்ன
வேலைகளைச் செய்து
தரலாம்.
இதன்
மூலம்
கணிசமான பணம்
பார்க்கலாம். வேலையில்லா பட்டதாரிகள் இந்த
வாய்ப்பை அதிகம்
பயன்படுத்திக் கொள்ளலாம்.
மறுவிற்பனை
உங்களது இணைய
முகவரி
யிலோ
அல்லது
உங்கள்
இணைப்பிலிருக்கும் நண்பர்களின் இணையதளத்திலோ பொருட்
களை
விற்பனை செய்வதன் மூலம்
வருமானம் ஈட்டலாம். அது
உங்களின் சொந்தப் பொருளாக தான்
இருக்கவேண்டும் என்கிற
அவசியம் இல்லை.
பிற
நிறுவனங்கள் தயாரிக்கும் பொருளை
உங்கள்
நண்பர்களுக்கு நீங்கள் விற்றுத் தந்து,
கமிஷன்
பெறலாம். நேரமும் தொடர்பும் உள்ள
யார்
வேண்டுமானாலும் இதைச்
செய்யலாம்.
No comments:
Post a Comment