ஆப்பிள் - இந்த பெயரைக் கேட்டாலே பலருக்கு பழத்தை விட ஐபோன், ஐபேட் போன்ற சாதனங்கள் தான் நினைவுக்கு வரும். என்ன தான் ஆன்ட்ராய்ட் முன்னேறி வந்தாலும் இன்னும் முடிசூடா மன்னனாகவே இருக்கிறது. அந்த ஆப்பிளுக்கும் AntiSec ஹேக்கர்ஸ் எனப்படும் இணையக் கொள்ளையர்கள் ஆப்பு வைத்து விட்டனர்.
ஐபோன், ஐபேட் போன்ற ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்துபவர்களுக்கு ஆப்பிள் கணக்கு (Apple ID) கொடுக்கப்படும். இந்த கணக்கை வைத்து தான் மியூசிக் (iTunes), அப்ளிகேசன் மற்றும் கேம்கள் (App Store), மின்னனு புத்தகங்கள் (iBookstore) ஆகியவற்றை வாங்கி பதிவிறக்கம் செய்ய முடியும்.
தற்போது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் (பன்னிரண்டு லட்சம்) ஆப்பிள் பயனாளர்களின் கணக்குகளை AntiSec என்னும் ஹேக்கர் குழுமம் திருடி இணையத்தில் வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் அமெரிக்க எஃப்.பி.ஐ (FBI) அதிகாரி ஒருவரின் மடிக்கணினியை AntiSec குழுவினர் ஹேக் செய்துள்ளனர். அதில் கிட்டத்தட்ட பன்னிரண்டு லட்சம் ஆப்பிள் பயனாளர்களின் முழுப்பெயர், மொபைல் எண்கள், வீட்டு முகவரி போன்ற விவரங்கள் ஒரு போல்டரில் இருந்தது.
ஆனால் எஃப்.பி.ஐ (FBI) இதனை மறுத்துள்ளது. திருடப்பட்ட கணக்குகள் FBI அதிகாரியின் கணினியில் இருந்து எடுக்கப்பட்டதல்ல என்று தெரிவித்துள்ளது.
நீங்கள் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தினால் கடவுச்சொற்களை உடனே மாற்றுங்கள்.
அந்த கணக்குகள் எஃப்.பி.ஐ அதிகாரி கணினியில் இருந்து திருடப்பட்டது என்றால், அவர்கள் ஏன் ஆப்பிள் பயனாளர்களின் கணக்குகளை வைத்திருக்க வேண்டும்?
இல்லையென்றால், வேறு எங்கிருந்து திருடப்பட்டது?
No comments:
Post a Comment