Tuesday, 2 October 2012

எச்சரிக்கை! கூகுள் பெயரில் மோசடி



நேற்று எனக்கு ஈமெயில் ஒன்று வந்தது. அது கூகுள் அனுப்பியது போலவே இருந்தது. அதில் நான் புதிய இடத்திலிருந்து "Handel"-ஐ பயன்படுத்தியதாகவும், அந்த இடத்தை என் "Handel"-லில் இணைப்பதற்கு கூகுள் கணக்கு மூலம் அமைப்புகளை மாற்றவும் எனவும் சொல்லப்பட்டிருந்தது.

அந்த மெயிலை பார்த்ததும் அது போலி என தெரிந்துவிட்டது. அதில் உள்ள லின்க்கை கிளிக் செய்தால் கூகுள் Login Page போலவே தோன்றும் பக்கத்திற்கு சென்றது.


இதை பார்த்ததும் உங்கள் கூகுள் கணக்கு மூலம் உள்ளே போனால் அவ்வளவுதான்! உங்கள் கணக்கு இந்த பக்கத்தை உருவாக்கியவர்கள் கைக்கு சென்றுவிடும். Address Bar-ல் உள்ள முகவரியை பாருங்கள். அது வேறு முகவரியாக இருக்கும்.

இது இணையக் குற்றங்களில் ஒன்றான Phishing என்ற மோசடியாகும். இது போல உங்களுக்கு ஈமெயில் வந்தால் அதனை ஸ்பாம் பகுதிக்கு அனுப்பிவிடுங்கள்.

இதே போன்ற ஒரு மோசடியை ஏற்கனவே  ட்விட்டரில் பரவும் வைரஸ் - எச்சரிக்கை என்ற  பதிவில் பார்த்தோம்.

இது போன்ற மெயில்கள் வந்தால் கவனமாக இருங்கள். முதலில் அனுப்பியவரின் முகவரியை பாருங்கள்.

### நானும் இணையத்தில் தேடிப் பார்த்துவிட்டேன். Handel என்றால் என்னவென்று இன்னும் தெரியவில்லை. ஒரு வேலை மெயில் அனுப்பியவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதோ? (இல்லையென்றால் எனக்கு ஆங்கிலம் தெரியவில்லையா?)

No comments:

Post a Comment