செவ்வாய்க் கிரகத்தில் இறங்கி அதன் தரை மேற்பரப்பை ஆராய்ச்சி செய்து வரும் கியூரியோசிட்டி விண்கலம் சமீபத்தில் பூமிக்கு அனுப்பி வைத்த புகைப்படங்கள் திகைப்பூட்டுவதாக உள்ளன.
இதற்குக் காரணம் சந்திரனின்
மேற்பரப்பில் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங்கின்
காலடித்தடம் காணப் படுவதை ஒத்த
காலடித்தடங்கள் போன்ற புகைப் படங்கள் மனித
இனம் செவ்வாய்க்குப் பயணிப்பதற்கு
முன்பே அங்கு காணப்படுவதாகும்.
எனினும் நாசாவின் விண்வெளி ஆய்வு கூடமான JPL இன் விஞ்ஞானிகள் பின்னர் தெரிவித்த தகவல்களில் அது கியூரியோசிட்டி ரோவர் விண்வண்டி அங்கு ஊர்ந்த போது ஏற்ப்பட்ட அடையாளம் என்று கூறிய போதும் அது மனிதனின் காலடி அல்லது சப்பாத்தின் தடம் போலவே காணப்படுவது அதிசயிக்கத்தக்கது எனக் கூறியுள்ளனர்.

மேலும் சந்திரத் தரையில் காணப்படும் ஆர்ம்ஸ்ட்ரோங்கின் காலடித் தடம் அங்கு வளி மண்டலம் இல்லாமையால் இன்னும் மில்லியன் வருடங்களுக்கும் அழியாமல் அப்படியே இருக்கும் எனவும் செவ்வாய்க் கிரகத்தில் காணப்படும் தடம் அதை விட விரைவாக அழியக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன எனவும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment