Sunday, 5 August 2012

விண்டோஸ் 8 குறித்து புதிய தகவல்கள் வெளியீடு

விண்டோஸ் 8 குறித்து புதிய தகவல்கள் வெளியீடு


மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய இயங்குதளமான விண்டோஸ் 8, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் விற்பனைக்கு வர உள்ளது.

இதன் காரணமாக தற்போது பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கத் திட்டமிடுபவர்கள் தங்கள் முடிவை சற்று ஒத்தி போட்டுள்ளனர். எனவே பெர்சனல் கம்ப்யூட்டரின் விற்பனை உலக அளவில் சரியத் தொடங்கி உள்ளது.
இதற்குக் காரணம் விண்டோஸ் 8 வர்த்தக வெளியீட்டிற்கான திகதி அறிவிப்பு மட்டுமல்ல. அதன் ரிலீஸ் பிரிவியூ காட்டியுள்ள பல புதிய வசதிகளும் தான்.
கணணி விற்பனை செய்பவர்களும் விண்டோஸ் 8 இயங்குதளம் வர இருப்பதால், தங்களிடம் உள்ள பெர்சனல் மற்றும் மடிக்கணணிகளின் இருப்பு எண்ணிக்கையினைக் குறைக்க விரும்பி செயலில் காட்டி வருகின்றனர்.
உலக அளவில் மொத்த கணணி விற்பனை கடந்த மூன்று மாதங்களில், சென்ற ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 0.1 சதவிகிதம் குறைந்துள்ளது.
ஆனால் இதே காலத்தில் லெனோவா தன் கம்ப்யூட்டர் விற்பனையை உயர்த்தியுள்ளது. 25% கூடுதல் விற்பனையுடன், மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.
முதல் இடத்தை எச்.பி. கம்ப்யூட்டர்கள் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்தாலும், இந்த சந்தையில் இவற்றின் விற்பனைப் பங்கு 17.6 சதவிகிதத்திலிருந்து 15.5%க்கு இறங்கியது.
அசூஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனை 39.8% உயர்ந்தாலும், ஐந்தாவது இடத்திலேயே தொடர்ந்து இருந்து வருகிறது.
விண்டோஸ் 8 சிஸ்டத்தினைத் தாங்கள் விற்பனை செய்திடும் கணணிகளில் பதிந்து அளித்திடும் நிறுவனங்களிடம் இருந்து, லைசன்ஸ் ஒன்றுக்கு 100 டொலர் மைக்ரோசாப்ட் கட்டணமாக விதித்திருந்தது. இதனைத் தற்போது குறைத்துள்ளதாக, உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
விண்டோஸ் ஆர்.டி பதிந்த கணணிகளுக்கான உரிமக் கட்டணம் 80 முதல் 100 டொலராகவும், எக்ஸ் 86 பதிப்புக்கு 60 முதல் 80 டொலராகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment